Enable Javscript for better performance
கோயில் விழாவில்  தாக்குதல் சாலை மறியல்: 8 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கோயில் விழாவில்  தாக்குதல் சாலை மறியல்: 8 பேர் கைது

    By ராசிபுரம்  |   Published on : 15th April 2016 06:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் அருகே கோயில் விழாவில், தகராறில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதை அடுத்து, 8 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

    ராசிபுரம் அருகே சிங்களாந்தபுரத்தில் காளியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. இக்கோயிலில் பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி மேளதாளத்துடன் சக்தி அழைத்தல் நிகழ்ச்சியை நடத்தினர். இதில், ஒரு பிரிவைச் சேர்ந்தோர் விழாவில் புகுந்து ஆட்டம் ஆடியதாகக் கூறப்படுகிறது. இதைத் தட்டிக்கேட்டவர்களை, இளைஞர்கள் சிலர் தாக்கினராம். இதில், பலர் காயமடைந்ததாகத் தெரிகிறது.  இதையடுத்து, தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், ராசிபுரம் - சேந்தமங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து  அங்கு வந்த போலீஸார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இத் தாக்குதலில் ஈடுபட்டதாக 8 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai