Enable Javscript for better performance
சரக்கு வாகனத்தில் ஆள்களை ஏற்றிச் சென்றால் நடவடிக்கை - Dinamani

சுடச்சுட

    

    சரக்கு வாகனத்தில் ஆள்களை ஏற்றிச் சென்றால் நடவடிக்கை

    By நாமக்கல்  |   Published on : 15th April 2016 06:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சரக்கு வாகனத்தில் ஆள்களை ஏற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி எச்சரிக்கை விடுத்தார்.

     இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

      சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிச் செல்வதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது. சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றிச் செல்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு சட்டத்துக்குப் புறம்பாக சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றிச் சென்றால் அவ் வாகன உரிமையாளர், ஓட்டுநர் மீது இந்திய மோட்டார் வாகனச் சட்டம், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள், தேர்தல் விதிமுறைகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

     கடந்த 11-ஆம் தேதி ராசிபுரம் வட்டம், ஆட்டையாம்பட்டி பிரதானச் சாலை பிரிவிலிருந்து வெண்ணந்தூர் செல்லும் சாலையில் அத்தனூரில் பொதுமக்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு அச் சரக்கு வாகனத்தின் உரிமையாளரும், ஓட்டுநருமான மாதவன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.  

     சரக்கு வாகனங்களை பொருள்களை ஏற்றிச் செல்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் மக்களை ஏற்றிச் செல்லக் கூடாது. அவ்வாறு பொதுமக்களை சரக்கு வாகனங்களில் ஏற்றிச் செல்வது கண்டறியப்பட்டால் அச் சரக்கு வாகன உரிமையாளர், ஓட்டுநர் மீது இந்திய மோட்டார் வாகனச் சட்டம், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள், தேர்தல் விதிமுறைகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai