Enable Javscript for better performance
தமிழ் புத்தாண்டு: நாமக்கல் மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ் புத்தாண்டு: நாமக்கல் மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு

    Published on : 15th April 2016 06:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

    குமாரபாளையம் அம்மன் நகர் ஐயப்பன் கோயிலில் சிறப்பு கனி தரிசன வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.  கோயில் வளாகத்தில் கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    பள்ளிபாளையம் சாலை, எம்.ஜி.ஆர். நகர் அருகேயுள்ள சீரடி சாய்பாபா கோயிலில் சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டது. கனி தரிசனம் செய்தல், ஸ்ரீ சாயி அஷ்டோத்ர வழிபாடு செய்யப்பட்டதுடன், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குமாரபாளையம் காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் புத்தாடை அணிந்தும், குடும்பம், குடும்பமாகவும் கோயிலுக்கு வந்து புத்தாண்டு தின சிறப்பு வழிபாடு நடத்தினர். இதனால், அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    பரமத்தி வேலூர்...    பதமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பரமத்தி வேலூர் சுற்றுப்பகுதி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

     பரமத்தி வேலூர் மகா மாரியம்மன் கோயில், ஐயப்பன் கோயில், சத்திரத்து விநாயகர், பஞ்சமுக விநாயகர், நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோயில், பாண்டமங்கலம் வெங்கட்ரமண பெருமாள் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், பச்சைமலை முருகன் கோயில்,கபிலர்மலை முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு,  சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

     விழாவை முன்னிட்டு அப் பகுதி பொதுமக்களும், பக்தர்களும் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai