Enable Javscript for better performance
தி.மு.க. பொதுக் கூட்டம்: லியோனி பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில்,  நாமக்கல் பேருந்து நிலையம் அருகே பொதுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

     கூட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் சாம்சம்பத் தலைமை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர், திமுக. ஆட்சியின் போது தொடங்கப்பட்ட திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கி வைத்து ள்ளனர். எனவே, இத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர். சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாற்றத்துக்கு மக்கள் தயாராகி வருகின்றனர் என்றார்.

     கூட்டத்தில் நகரச் செயலர் செல்வராஜ், மாநில சட்ட திருத்தக் ழு உறுப்பினர் நக்கீரன், தலைமை கழக பேச்சாளர் ராஜகோபால்,  நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai