Enable Javscript for better performance
துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கொல்லிமலையில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்ததாக 3 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

     நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வனப் பகுதியில் சிலர் நாட்டுத் துப்பாக்கியுடன் வன விலங்குகளை வேட்டையாடி வருவதாக சேலம் கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து, எஸ்.ஐ. சங்கீதா, போலீஸார் புதன்கிழமை கொல்லிமலை வனப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

     அப்போது, விளாரம் காட்சி முனைப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த 3 பேரை பிடித்து, வாழவந்து நாடு போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் குத்தகல்பட்டியைச் சேர்ந்த தங்கதுரை (30), செங்காடைச் சர்ந்த மணிகண்டன் (27), புதுவளவைச் சேர்ந்த பாலு (40) என்பதும், இத் துப்பாக்கிகள் உரிமம் பெறாதவை எனவும் தெரிய வந்தது. இதையடுத்து, துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்த போலீஸார், 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai