Enable Javscript for better performance
ராசிபுரத்தில் அம்பேத்கர் பிறந்த நாள்- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரத்தில் அரசியல் கட்சிகள் சார்பில், அம்பேத்கர் பிறந்த நாள்விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

     நகர அ.தி.மு.க. சார்பில்,  ராசிபுரம் சிவானந்தா சாலையில் உள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கப்பட்டன.  

    இதில், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், ராசிபுரம் தொகுதி வேட்பாளர் மருத்துவர் வி.சரோஜா, நகரச் செயலரும், நகர்மன்றத் தலைவருமான எம்.பாலசுப்பிரமணியம், துணைத் தலைவர் எஸ்.வெங்கடாஜலம், எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலர் கே.பி.எஸ்.சுரேஷ்குமார் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க இயக்குநர்கள், கட்சித் தொண்டர்கள் பங்கேற்று மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மக்கள் நலக்கூட்டணி

    ராசிபுரம் நகர மக்கள் நலக் கூட்டணி சார்பில் நடைபெற்ற விழாவுக்கு தே.மு.தி.க. நகரச் செயலர் அ.இளையராஜா தலைமை வகித்தார். ம.தி.மு.க. நகரச் செயலர் நா.ஜோதிபாசு, அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.  த.மா.கா. நகரத் தலைவர் ஆர்.டி.இளங்கோ, கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கந்தசாமி, விடுதலைச் சிறுத்தைகள்  நகரச் செயலர் பழனிசாமி, இந்திய கம்யூனிஸ்ட்சி நகரச் செயலர் எஸ்.மணிமாறன், ம.தி.மு.க. ஒன்றியச் செயலர் ஏ.ஆர்.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்திய மாணவர் சங்கம்: இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு சங்க நிர்வாகி கண்ணன்உருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai