Enable Javscript for better performance
வி.ஐ.பி. அந்தஸ்து பெற்ற ராசிபுரம் தொகுதி - Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் தனி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்கள், பேரவைத் தலைவர், துணைத் தலைவராக அந்தஸ்து உயர்ந்ததால், இத் தொகுதி வி.ஐ.பி. அந்தஸ்தைப் பெற்றது.

      ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதி 1952-இல் உருவாக்கப்பட்டது. இத் தொகுதியில் இதுவரை வெற்றி பெற்ற அ.தி.மு.க., தி.மு.க.வினர் யாரும் அமைச்சர் பதவி என்ற அளவுக்கு உயர்ந்ததில்லை. இந்த நிலையில், தொகுதி மறுசீரமைக்கப்பட்டு தனித் தொகுதியாக மாற்றம் செய்யப்பட்டு நடைபெற்ற 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் பி.தனபால், தி.மு.க. சார்பில் வி.பி.துரைசாமி ஆகியோர் போட்டியிட்டனர். இவர்கள் இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இருவரும் வெளியூரைச் சேர்ந்தவர்கள்.

    ஏற்கெனவே, சங்ககிரி தொகுதியில் 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற பி.தனபால் அமைச்சராகவும்,  இதேபோல, அதே தொகுதியில் 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வென்ற வி.பி.துரைசாமி பேரவை துணைதத் தலைவராகவும் உயர்ந்தனர்.  

    தொகுதி சீரமைப்பில் தனித் தொகுதியாக இருந்த சங்ககிரி பொது தொகுதியாக மாறியது. இதனால், இந்த இரு கட்சியினரும் 2011-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் தொகுதி மாறி தனி தொகுதியாக மாறிய ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டனர்.   அமைச்சராகவும், பேரவைத் துணைத் தலைவராகவும் உயர்ந்ததால், இத் தொகுதி வி.ஐ.பி. அந்தஸ்தைப் பெற்றது.

     

    வி.சரோஜா: இந்த நிலையில் தற்போது நடைபெறும் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக மருத்துவர் வி.சரோஜா நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே சங்ககிரி சட்டப் பேரவை உறுப்பினராகவும், ராசிபுரம் (தனி) மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்ததுடன் மட்டுமல்லாமல், தாட்கோ வாரியத் தலைவர், மனித உரிமை ஆணைய உறுப்பினர் போன்ற பதவிகள் வகித்தவர். மேலும், அ.தி.மு.க.வில் மாநில மகளிரணி இணைச் செயலராக உள்ளார்.

    வி.பி.துரைசாமி: இதேபோல, மீண்டும் இத் தொகுதியில் தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வி.பி.துரைசாமி, அக் கட்சியில் சட்டப் பேரவை உறுப்பினர், துணை சபாநாயகர் போன்ற பதவிகளை வகித்தவர். தி.மு.க.வில் துணைப் பொதுச் செயலர் பதவி வகிக்கிறார். இதேபோல, இரு கட்சியிலும் பல பதவிகள் வகித்தவர்கள் ராசிபுரம் தொகுதியில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால், கடந்த தேர்தலை போலவே இத் தேர்தலிலும் ராசிபுரம் தொகுதி அனைவரும் உற்று நோக்கும் வி.ஐ.பி. தொகுதியாக மாறியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai