சுடச்சுட

  

  தமிழக அரசு வழங்கும் விருதுகளை பெற, இசைக் கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
   நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி: மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும், மாவட்ட கலை மன்றம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 5 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க தமிழக அரசு ஆணை வழங்கியுள்ளது.
   அதன்படி, நாமக்கல் மாவட்ட அளவில் இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம், நாட்டுபுறக் கலைகள், நாடகம், கருவி இசையில் சாதனை படைத்த கலைஞர்களில், 18 வயதுக்குள்பட்டோருக்கு கலை இளமணி, 19 வயது முதல் 35 வயது பிரிவினருக்கு கலை வளர்மணி, 36 வயது முதல் 50 வயது பிரிவினருக்கு கலை சுடர்மணி, 51 வயது முதல் 60 வயது பிரிவினருக்கு கலை நன்மணி, 61 வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கு கலை முதுமணி போன்ற விருதுகள் வழங்கப்படுகின்றன.
   நாமக்கல் மாவட்ட கலைஞர்கள் விருது பெற, தங்களது சுயவிவரக் குறிப்புடன் வயது மற்றும் பணியறிவு ஆகியவற்றை குறிப்பிட்டு, அதனுடன் புகைப்படத்தை இணைத்து சான்றுகளுடன் உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத் துறை மண்டல அலுவலகம், தளவாய்பட்டி திருப்பதி கவுண்டனூர் சாலை, அய்யம்பெருமாப்பட்டி அஞ்சல், சேலம் - 636302 என்ற முகவரிக்கு வரும் 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai