சுடச்சுட

    

    இரவுக் காவலர் பணி: நேர்முகத் தேர்வில் 133 பேர் பங்கேற்பு

    By DIN  |   Published on : 01st December 2016 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இரவுக் காவலர் பணிக்கு நடைபெற்ற நேர்முகத் தேர்வில் 133 பேர் பங்கேற்றனர்.
    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இரவுக் காவலர் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்தை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இப்பணியிடத்துக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பின் அடிப்படையில் இல்லாமல், அனைவரும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
    இப்பதவிக்கு பெண்கள் உள்பட மொத்தம் 299 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் அனுப்பப்பட்டு, அவர்களுக்கான நேர்முகத் தேர்வு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விஜயா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
    இதில் மொத்தம் 133 பேர் பங்கேற்றனர். இவர்களின் கல்வித் தகுதி, வயது மற்றும் திறமை அடிப்படையில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai