சுடச்சுட

  

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில், நாமக்கல்லில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   நாமக்கல் அண்ணாசிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலர் சின்னுசாமி தலைமை வகித்தார். அமைப்புச் செயலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் பெரியசாமி கோரிக்கைகள் குறித்து பேசினார்.
   தமிழகத்தில் 8-ஆவது ஊதியக்குழுவை அமைத்து, ஊதியக்குழு ஊதியத்தை கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும். 7 சதவீத அகவிலைப்படி உயர்வினை வழங்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
   ஆர்ப்பாட்டத்தில், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், மோகனூர், சேந்தமங்கலம், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சங்க கிளைகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai