சுடச்சுட

  

  காசநோய் சிகிச்சை: தனியார் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்

  By DIN  |   Published on : 01st December 2016 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தனியார் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தங்களிடம் சிகிச்சை பெறும் காசநோயாளிகள் குறித்த விவரத்தை தெரிவிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் கேட்டுக்கொண்டுள்ளார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி: திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய்த் தடுப்பு திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் காசநோய்த் தடுப்புப் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் கீழ் காசநோயாளிகள் கண்டறியப்பட்டு, உலகத்தரம் வாய்ந்த 6 முதல் 8 மாத டாட்ஸ் சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் காசநோயாளிகளுக்கு இலவசமாக கிடைப்பதுடன், அவர்கள் மருந்து உள்கொள்வதை களப்பணியாளர்கள் மேற்பார்வையிட்டு, நோயாளிகள் தொடர்சிகிச்சை எடுக்க உதவி செய்கின்றனர். மேலும் முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் காசநோய் பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு
  வருகிறது.
  எனவே, மத்திய அரசாணைப்படி தனியார் மருத்துவமனைகள், தனியார் மருத்துவர்களால் காசநோய் கண்டறியப்பட்டால், அதை உரிய படிவத்தில் அரசு மாவட்ட காசநோய் மையத்துக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். இதன் மூலம், மாவட்டத்தில் காசநோய் தாக்கத்தை துல்லியமாகக் கணக்கிடப்படுவதுடன், காசநோய்த் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தவும் உதவியாக இருக்கும்.
  மேலும், தனியார் மருத்துவமனைகள், தனியார் மருத்துவர்களால் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படும் நோயாளிகளுக்கு, காசநோய் கண்டறியப்பட அதிநவீன ஆய்வகப் பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது.   மேலும் விவரங்களுக்கு மாவட்ட காசநோய் மையம், அரசு தலைமை மருத்துவமனை வளாகம், நாமக்கல் என்ற முகவரியில் நேரில் அணுகலாம். தொடர்புக்கு தொலைபேசி எண் 04286 229025, செல்லிடப்பேசி எண் 9865090912.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai