சுடச்சுட

  

  டிச.4-இல் ஜவகர் சிறுவர் மன்ற கலைப் பயிற்சிகள் தொடக்கம்

  By DIN  |   Published on : 01st December 2016 09:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், நாமக்கல் நகரவை உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் பகுதிநேர கலைப் பயிற்சிகள் வரும் 4-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி: குரலிசை (பாட்டு), பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கைவினை, கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக் கலைகள் என நான்கு கலைப் பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
  பயிற்சிகள் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும் நடைபெறும். 5 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர் இப்பயிற்சியில் சேரலாம். இப்பயிற்சிக்கு கட்டணம் எதுவும் இல்லை. சிறுவர் மன்ற உறுப்பினராக பதிவு செய்வதற்கு ஆண்டு சந்தாவாக ரூ.200 செலுத்த வேண்டும். இப்பயிற்சிக்கான வகுப்புகள் 2017-ஆம் ஆண்டு மே மாதம் வரை நடைபெறும். இம்மன்றத்தில் உறுப்பினராகி பயிற்சி பெறும் சிறுவர், சிறுமியர் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும், கருத்தரங்கம், செயல்முறை பயிலரங்கம் ஆகியவற்றில் கலந்துகொள்ளவும் வாய்ப்பளிக்கப்படும்.
  மேலும் விவரங்களுக்கு ஜவகர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலரை 9443224921 என்ற செல்லிடப்பேசி எண் அல்லது சேலம் மண்டல உதவி இயக்குநர் அலுவலகத்தை 0427-2386197 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai