சுடச்சுட

    

    தீ விபத்து: ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

    By DIN  |   Published on : 01st December 2016 09:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் அருகே உள்ள உழவர்பட்டியில், செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த தீ விபத்தில் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. இதில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சாம்பலாயின.
    உழவர்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராசு (50). இவர் செவ்வாய்க்கிழமை இரவு தனது குடும்பத்தாருடன் வீட்டுக்கு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாரம். அப்போது, திடீரென வீட்டினுள் தீப்பிடித்து எரிந்ததாம். இதைப் பார்த்ததும் தங்கராசு மற்றும் அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். பின்னர் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    அதன் பேரில், அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த விபத்தில் வீட்டினுள் இருந்த பீரோ, துணி, மணிகள், மளிகைப் பொருள்கள் உள்பட சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமானதாக தங்கராசு தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai