சுடச்சுட

    

    நாமகிரிப்பேட்டையில் ரூ.7 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை

    By DIN  |   Published on : 01st December 2016 09:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமகிரிப்பேட்டையில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில், ரூ.7 லட்சத்துக்கு மஞ்சள் வர்த்தகம் நடைபெற்றது.
     நாமகிரிப்பேட்டையில் உள்ள வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெறும். இதில், விரலி ரகம் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.8,889-க்கும், அதிகபட்சம் ரூ.9,419-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ரூ.7,969-க்கும், அதிகபட்சம் ரூ.8,229-க்கும் விற்பனையானது. பனங்காலி ரகம் ரூ.13,800-க்கு ஏலம் போனது. விரலி 82 மூட்டை, உருண்டை 42, பனங்காலி ஒரு மூட்டை என மொத்தம் 125 மூட்டைகள் ரூ.7 லட்சத்துக்கு ஏலம் போயின. ரூபாய் நோட்டு பிரச்னையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு பிறகு மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது. வியாபாரிகள், ஆர்.சி.எம்.எஸ்.க்கு நெப்ட், ஆர்.டி.ஜி.எஸ். (இணையதள பரிவர்த்தனை) மூலம் பணம் அனுப்பி விடுவர். அங்கிருந்து காசோலையாக விவசாயிகளுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai