சுடச்சுட

  

  மரவள்ளி பயிருக்கு பயிர்க் காப்பீடு செய்து பயன்பெற அறிவுரை

  By DIN  |   Published on : 01st December 2016 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை சுற்று வட்டாரப் பகுதியில், மரவள்ளி பயிரிடும் விவசாயிகள் மரவள்ளி பயிருக்கு காப்பீடு செய்து பயன்பெற வேண்டும் என தோட்டக்கலைத் துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து கபிலர்மலை தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் யோகநாயகி வெளியிட்டுள்ள அறிக்கை: கபிலர்மலை வட்டாரத்தில் நடப்பு ரபி பருவத்தில், மரவள்ளி பயிரிடும் விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
  மரவள்ளி பயிர் விதைக்க உள்ளவர்கள் ஜனவரி மாதம் 31-ஆம் தேதி 2017-ஆண்டுக்குள் பயிர்க் காப்பீடு செய்யலாம். கபிலர்மலை வட்டாரத்தில் உள்ள 22 வருவாய் கிராமங்களுக்கு மரவள்ளி பயிர்க் காப்பீடு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மரவள்ளி பயிர்களுக்கு விவசாயிகள் செலுத்தப்பட வேண்டிய தவணைத் தொகை மொத்த காப்பீட்டுத் தொகையில் இருந்து 50 சதவீதமாகும். மேலும் விவரங்களுக்கு கபிலர்மலை தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai