சுடச்சுட

    

    பாண்டமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான ஜூனியர் ரெட்கிராஸ் பயிற்சி முகாம் இரண்டு நாள்கள் நடைபெற்றது.
    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோபிதாஸ் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் அருளரங்கன், தலைமை ஆசிரியர் தங்கவேலு, ரெட்கிராஸ் மாவட்டச் செயலர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஊமைத்துரை வரவேற்றார். மாநில ஜே.ஆர்.சி. பயிற்றுநர் செல்வராஜ் கலந்துகொண்டு ரெட்கிராஸின் செயல்பாடுகள் குறித்துப் பேசினார்.
    இதில் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 450 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
    நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் டாக்டர் நெடுஞ்செழியன், விவேகானந்தா பள்ளித் தாளாளர் சுப்பிரமணியம், ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளியின் இயக்குநர்கள் ராஜா, சக்தி, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் சோமசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவு விழாவில் கபிலர்மலை ஒன்றிக்குழு முன்னாள் தலைவர் ராஜேந்திரன் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். மகளிர் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செல்வராஜ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai