சுடச்சுட

  

  லாரி கூண்டு கட்டும் தொழில்பேட்டையில் துணை மின்நிலையம் அமைக்க நடவடிக்கை

  By DIN  |   Published on : 01st December 2016 09:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் லாரி கூண்டு கட்டும் தொழில்பேட்டையில், லாரி கட்டுமான தொழில்சார்ந்த பணியில் ஈடுபடும் சங்க உறுப்பினர்களுக்கு நிலம் ஒதுக்கீடு, துணை மின்நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  இதுகுறித்து நாமக்கல் லாரி கூண்டு கட்டும் தொழில்பேட்டை தலைவர் பி.வெள்ளியங்கிரி, செயலர் எம்.புகழேந்திரன் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே முசிறி கிராமத்தில் லாரி கூண்டு கட்டும் தொழில்பேட்டை அமைக்க, கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
  அதைத் தொடர்ந்து, இதற்கான உள்கட்டமைப்பு பணிக்காக அரசு நிதி ஒதுக்கீடும் செய்தது. சாலைகள், சாக்கடைக் கால்வாய், ஆழ்துளைக் கிணறு, குடிநீர்த் தொட்டி, நுழைவு வாயில், பெயர் பலகை மற்றும் வழிகாட்டி பெயர் பலகை போன்ற பணிகள் நடைபெற்று வந்தன.
  தற்போது அப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து, தொழில்பேட்டை வளாகத்தில் துணை மின்நிலையம் அமைப்பது குறித்தும், லாரி கூண்டு கட்டும் தொழில் செய்யும் உறுப்பினர்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்வது குறித்தும் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
  இந்த கூட்டத்தில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக துணை மின்நிலையம் அமைக்கவும், லாரி கூண்டு கட்டும் தொழில் சார்ந்தவர்களுக்கு நிலத்தை பிரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai