சுடச்சுட

  

  மத்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நேரு யுவகேந்திரா நாமக்கல் கிளை சார்பில், சுற்றுவட்டார இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம், வட்டூர் அரசு தொடக்கப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
  வட்டூர் விவசாயக் குழுத் தலைவர் தங்கராசு தலைமை வகித்தார். நுகர்வோர் பாதுகாப்பு சங்க உறுப்பினர் மணி முன்னிலை வகித்தார். நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர் சங்கர் வரவேற்றார். கிராம உதவியாளர் ஆனந்த், அரசுப் பள்ளி ஆசிரியர் சிலம்பரசன், அன்பரசு, விஜயகுமார் உள்ளிட்டோர்
  பேசினர்.
  விழாவில் மாதிரி நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு கல்வி, சுகாதாரம், ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு, நிதி, நீதி, சட்டம், விளையாட்டு ஆகியவை வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து இளைஞர்களிடையே விவாதம் நடைபெற்றது.
  ஏற்பாடுகளை இளையோர் மன்ற உறுப்பினர்கள் வாசுதேவன், மாரிமுத்து, சின்ராசு, பிரசாந்த், அஜித் குமார், ஆனந்த் ஆகியோர் செய்திருந்தனர். இதில், 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். காமராஜர் விளையாட்டுக் குழு கோகுல்ராஜ் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai