சுடச்சுட

  

  வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் (அட்மா திட்டம்) கீழ், ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள தாற்காலிக பணியிடங்களுக்கு பணியமர்த்தும் முகமைகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.கலியராஜ் வெளியிட்ட செய்தி: நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் தாற்காலிக பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. எனவே, அரசு அங்கீகாரம் பெற்ற விருப்பமுள்ள பணியமர்த்தும் முகமைகள், திட்ட இயக்குநர்(அட்மா), வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சிலுவம்பட்டி அஞ்சல், நாமக்கல்-637003 என்ற முகவரிக்கு  விலைப்புள்ளியை (நிறுவனம் தொடர்பான ஆவணங்களுடன்) டிசம்பர் மாதம் 5-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai