சுடச்சுட

  

  பரமத்திவேலூர், பாண்டமங்கலத்தில் இரு தரப்பினரிடையே புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் 7 பேரை பரமத்தி வேலூர் போலீஸார் கைது செய்தனர்.
  தலைமறைவான 7 பேரைத் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  பாண்டமங்கலத்தைச் சேர்ந்த பிரபாகரன் (21) தரப்பினருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மேகநாதன் (20) தரப்பினருக்கு ஏற்கெனவே முன் விரோதம் இருந்து வந்தது.
  இந்த நிலையில், புதன்கிழமை இரவு இரு தரப்பினரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பிரபாகரன், நந்தா, கரிகாலன், மேகநாதன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
  இரு தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் பரமத்தி வேலூர் போலீஸார் வழக்குப் பதிந்து பாண்டமங்கலத்தைச் சேர்ந்த கார்த்திக் (22), வடிவேல் (25), பொத்தனூரைச் சேர்ந்த விஜயகுமார் (25), வரதராஜன் (24), திருமுருகன் (24), முருகதாஸ் (21), விக்னேஸ் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடை மேலும் 7 பேரை பரமத்தி வேலூர் போலீஸார் தேடி வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai