சுடச்சுட

  

  உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி நாமக்கல் நகரில் விழிப்புணர்வுப் பேரணி, உறுதிமொழி ஏற்பு, மனிதச் சங்கிலி நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
  மாவட்ட செஞ்சுருள் சங்கம் சார்பில் நாமக்கல் அரசுத் தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற விழிப்புணர்வு மனிதச் சங்கிலி, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கு மருத்துவமனைக் கண்காணிப்பாளர் எஸ்.செல்வக்குமார் தலைமை வகித்தார்.
  ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்டச் செயலாளர் ராஜேஸ்கண்ணன், உறைவிட மருத்துவர் கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சுகாதாரப் பணிகள் உதவி இயக்குநர் நக்கீரன் கலந்துகொண்டார். எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை பள்ளி மாணவ, மாணவியர் ஏற்றனர்.
  இதேபோல் புதுச்சத்திரம் பாவை பார்மஸி கல்லூரி, நர்சிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர் சார்பில் நாமக்கல் அரசு மருத்துவமனை முன் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணியில் கல்லூரி மாணவ, மாணவியர் திரளாகப் பங்கேற்று நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனர்.
  முன்னதாக மருத்துவமனைக் கண்காணிப்பாளர் எஸ்.செல்வகுமார் பேரணியைத் தொடக்கி வைத்தார். பாவை கல்வி நிறுவன இயக்குநர் (நிர்வாகம்) கே.கே.ராமசாமி, சேந்தமங்கலம் காவல்துறை ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  பாவை பார்மசி கல்லூரி முதல்வர் ஆர்.பி.எழில்முத்து, உடற்கல்வி இயக்குநர் சந்தானராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  குமாரபாளையத்தில்...
  குமாரபாளையத்தில் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
  நம்பிக்கையின் பாலம் அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஊர்வலத்துக்கு ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டி தலைமை வகித்தார். செயலர் பிரிஸ்கா முன்னிலை வகித்தார். ராஜம் திரையரங்கு அருகே புறப்பட்ட ஊர்வலம் சேலம் பிரதான சாலை, பள்ளிபாளையம் சாலை, எடப்பாடி சாலை வழியாகச் சென்று நகராட்சி அலுவலகம் அருகே முடிவடைந்தது.
  ஊர்வலத்தில் எய்ட்ஸ் நோயின் பாதிப்புகள், பரவும் விதம், அதிலிருந்து தற்காத்துக் கொள்தல், நோய் பாதித்தவர்களுக்கு உதவுதல் குறித்த விழிப்புணர்வு கோஷம் எழுப்பப்பட்டதோடு, துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai