சுடச்சுட

  

  ஜேசிஐ திருச்செங்கோடு டெம்பிள் கிளை நிர்வாகிகள் பதவியேற்பு

  By DIN  |   Published on : 02nd December 2016 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜேசிஐ திருச்செங்கோடு டெம்பிள் கிளை இயக்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
  இதில் தலைவராக கவிக்குமார், செயலராக சங்கர், பொருளாளராக சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவியேற்றனர். விழாவில் அரசுப் பள்ளிக்கு மின் விசிறிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வேட்டி, தட்டு, போர்வைகள் வழங்கப்பட்டன.
  சட்டையம்புதூர் நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அகரமுதலி வழங்கப்பட்டன. விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக தேசிய முன்னாள் தலைவர் பாலவேலாயுதம், முன்னாள் சட்ட ஆலோசகர் உலகநாதன், மண்டலத் தலைவர் ராஜேஸ்குமார், உதவித் தலைவர் வினோத், தேசிய பயிற்சியாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai