சுடச்சுட

  

  நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் ரூ.1.13 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

  By DIN  |   Published on : 02nd December 2016 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட நாமகிரிப்பேட்டை, கார்கூடல்பட்டி, ஆயில்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
  நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய சேவை மையக் கட்டடக் கட்டுமானப் பணி, கார்கூடல்பட்டி ஊராட்சியில் ரூ.30 லட்சத்தில் அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சிக்கூடம் புதிதாக அமையவுள்ள இடம், கே.கணவாய்ப்பட்டியில் ரூ.19.73 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் மரக்கன்றுகள் நாற்றங்கால், அதே பகுதியில் ரூ.90 ஆயிரத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிப்பதற்கான தொட்டிகள் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
  இதே ஊராட்சி, பெத்தநாய்க்கன்பட்டியில் தனிநபர் கழிப்பிடம் கட்டப்பட்டு வரும் பணி, ரூ.3.34 லட்சத்தில் மரக்கன்றுகள் பராமரிப்புப் பணி, ரூ.27.20 லட்சத்தில் உடையார்பாளையம் உரம்பு சாலை முதல் செல்லியம்பாளையம் சாலை வரை புதிய தார் சாலை அமைக்கப்பட்டு வரும் பணி, ஆயில்பட்டியில் ரூ.6.50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி மையக் கட்டடப் பணி என மொத்தம் ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 12 லட்சத்து 78 ஆயிரத்து 834 மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் பார்வையிட்டார்.
  அனைத்துப் பணிகளையும் குறிப்பிட்ட காலகெடுவுக்குள் முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். ஆய்வின்போது அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
  இந்த ஒன்றியத்தில் 2013-14 ஆம் நிதியாண்டில் ரூ.17.55 கோடி மதிப்பீட்டில் 1,348 புதிய திட்டப் பணிகளும், 2014-15 ஆம் நிதியாண்டில் ரூ.15.29 கோடி மதிப்பீட்டில் 1,892 திட்டப் பணிகளும், 2015-16 ஆம் நிதியாண்டில் ரூ.13.88 கோடி மதிப்பீட்டில் 3,722 புதிய திட்டப்பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.
  2016-17 ஆம் நிதியாண்டில் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் 2,290 புதிய திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு இதுவரை 392 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதம் 1,898 பணிகள் நடைபெற்று வருகின்றன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai