சுடச்சுட

  

  பெண்ணிடம் நகை பறித்தவர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

  By DIN  |   Published on : 02nd December 2016 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமத்தி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் குண்டர் சட்டத்தில் வியாழக்கிழமை சிறையிலடைக்கப்பட்டார்.
  கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி பரமத்தி பாவடித் தெருவைச் சேர்ந்த முருகானந்தம் மனைவி தனலட்சுமியின் (48) கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க நகையை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த சேலம்,பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த குமார் (எ) பரத்குமார் (37) உள்பட இருவர் பறித்துச் சென்றனர்.
  தகவலின்பேரில் அவர்களை போலீஸார் துரத்திச் சென்று கீரம்பூர் சுங்கச்சாவடி அருகே பிடித்தனர். அதில் ஒருவர் தப்பிச் சென்றார். பிடிபட்ட பரத்குமாரிடம் விசாரணை நடத்தியதில் அவர், பரமத்தி, மோகனூர் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.
  இதையடுத்து பரத்குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ்வரன் பரிந்துரைத்தார். அதையேற்று பரத்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் உத்தரவிட்டார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai