சுடச்சுட

  

  நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக வியாழக்கிழமை பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
  வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
  நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த சில தினங்களாக அதிகாலை வேளையில் குளிர் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று காலை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வாகனம் மோகமூட்டத்துடன் காணப்பட்டது.
  தொடர்ந்து காலை 8 மணியளவில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்த மழை நாள் முழுவதும் லேசான துôறலுடன் நீடித்த வண்ணம் இருந்தது. மழையால் சாலையில் வாகனப் போக்குவரத்துக் குறைவாக இருந்தது.
  எனினும், மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏதும் இல்லை. இதேபோல் ராசிபுரம், வெண்ணந்தூர் போன்ற மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இதேநிலை நிலவியது. கடந்த சில நாள்களாக விளைநிலங்கள் வறட்சியைச் சந்தித்து வந்த நிலையில்,
  வியாழக்கிழமை பெய்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai