சுடச்சுட

  

  பரமத்தி மலர் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் மாநில அளவிலான யோகா போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.
  யோகா போட்டி சேலம் டாக்டர் விஜயாராகவாச்சாரியார் நினைவு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 21 பள்ளிகளைச் சேர்ந்த 613 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில் பரமத்தி மலர் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் பிரமிட் வடிவிலான செய்முறை போட்டியில் முதல், இரண்டாமிடத்தைப் பெற்றனர்.
  இசையுடன் கூடிய நடன யோகா போட்டிகளில் இரண்டாமிடத்தையும்,தனி நபர் போட்டியிலும் மற்றும் குழு போட்டியிலும், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றனர்.
  மாணவ, மாணவிகளை பள்ளித் தலைவர் பழனியப்பன், செயலாளர் கந்தசாமி, பொருளாளர் வெங்கடாசலம், யோகா ஆசிரியை மலர்கொடி உள்பட ஆசிரிய,
  ஆசிரியைகள் பாராட்டினர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai