சுடச்சுட

  

  பரமத்தி வேலூர், வெங்கமேட்டில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த கொப்பரைத் தேங்காய் ஏலம், விவசாயிகள் வராததால் ரத்து செய்யப்பட்டது.
  வெங்கமேட்டில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை கொப்பரைத் தேங்காய் ஏலம் நடைபெறும். மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்ததால் பணப் பிரச்னையில் கடந்த மூன்று வாரங்களாக கொப்பரைத் தேங்காய் ஏலம் ரத்து செய்யப்பட்டது.
  இந்த நிலையில் நிகழ்வாரம் வியாழக்கிழமை ஏலம் நடைபெறும் என ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் லோகம்மாள் அறிவித்திருந்தார்.
  இதனால், ஏலத்துக்கு பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். ஆனால், பணப் பிரச்னை, மழை பெய்தது போன்ற காரணங்களால் விவசாயிகள் யாரும் ஏலத்தில் பங்குகொள்ளவில்லை. இதையடுத்து ஏலம் ரத்து செய்யப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai