சுடச்சுட

  

  வெண்ணந்தூரில் புதிய வங்கிக் கணக்கு தொடங்க சிறப்பு முகாம்

  By DIN  |   Published on : 02nd December 2016 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வங்கி கணக்குத் தொடங்குவதற்கான சிறப்பு முகாம் ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் வியாழக்
  கிழமை நடைபெற்றது.
  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதிய வங்கிக் கணக்குத் தொடங்குவதற்கான அலுவலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் இந்த முகாம் நடைபெற்றது.
  முகாமை நாமக்கல் மாவட்டத் தொழிலாளர் அலுவலர் மஞ்சள்நாதன் தொடக்கி வைத்துத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதால் ஏற்படும் நன்மைகள், வங்கிக் கணக்குத் தொடங்குவதன் அவசியம் குறித்துப் பேசினார்.
  முகாமில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கிக் கிளைகள் மூலம் புதிய வங்கி கணக்குத் தொடங்கப்பட்டது. ஏற்கெனவே கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் ஆதார் எண், மொபைல் எண் இணைக்கும் பணியும் முகாமில் மேற்கொள்ளப்பட்டது.
  வெண்ணந்தூர் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி மேலாளர்கள், வங்கி அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர், தொழிலாளர் துணை ஆய்வாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
  அடுத்த முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச.4) இதே இடத்தில் நடைபெறும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai