சுடச்சுட

  

  திருச்செங்கோடு எஸ்பிகே ஜெம்ஸ் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடந்தது
   கண்காட்சியையொட்டி, எஸ்பிகே மெட்ரிக் பள்ளி, எஸ்பிகே மழலையர் பள்ளி, எஸ்பிகே பப்ளிக் பள்ளி ஆகியவற்றுக்கு தனித்தனி இடங்களில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
    3 நாட்கள் இந்த அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. தொடக்க விழாவில், மாணவர்கள் சேர, சோழ, பாண்டியர்களைப் போலவும், அதியமான், ஒளவையார் போலவும் வேடமிட்டு சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர். பள்ளிகளின் தாளாளர் செங்கோடன் குத்துவிளக்கேற்றி, கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
   பள்ளித் தலைவர் பிரபு, மெட்ரிக். பள்ளி முதல்வர் தனபால், ஆசிரியை சம்பூர்ணம்,  எஸ்பிகே பப்ளிக் பள்ளி முதல்வர் தாமோதரன் ஆகியோர் கண்காட்சியைப் பார்வையிட்டனர். இதில் மாணவர்கள் படைப்புகளையும், கைவினைப் பொருட்களையும், காட்சிக்கு வைத்திருந்தனர்.  

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai