சுடச்சுட

  

  நாமக்கல் அருகே வேலகவுண்டம்பட்டி கொங்கு நாடு கல்வியியல் கல்லூரி 8ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
   விழாவுக்கு கொங்கு நாடு கல்வி நிறுவனத்தின் நிறுவனர் ராஜன் தலைமை வகித்தார். இயக்குநர் ராஜேந்திரன், பொருளாளர் ராஜராஜன், தலைவர் ராஜா மற்றும் செயலர் சிங்காரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வியியல் கல்லூரியின் முதல்வர் சாந்தி வரவேற்றார்.
   மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூரியபிரகாஷ் பேசியது: அனைத்துத் துறை மாணவர்களையும் உருவாக்குவது ஆசிரியர்கள்.
  மாணவர்களிடம் அன்றைய நாளிதழ்களைப் படிப்பதற்கு ஆசிரியர்கள் ஆர்வம் ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் பொது அறிவு சம்பந்தமான விஷயங்கள் அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும்.  
   ஆசிரியர்கள்-மாணவர் உறவுநிலை நன்றாக அமைய வேண்டும்.  சுற்றுச்சூழல் பாதுகாப்பு,  மரம் நடுவது, மரத்தைப் பாதுகாப்பது போன்றவற்றில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai