சுடச்சுட

  

  கொல்லிமலை விவசாயிகளுக்கு பழப்பயிர் சாகுபடி பயிற்சி

  By DIN  |   Published on : 03rd December 2016 05:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  fruits

   

  பழப் பயிர்களில் அடர்நடவு மற்றும் கிளைகள் பரமாரிப்பு என்ற தலைப்பில் தொழில்நுட்பப் பயிற்சி முகாம் கொல்லிமலையில் அண்மையில் நடந்தது.
    அரியூர்நாடு கிராமத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சியை வேளாண் உதவி இயக்குநர் சுப்ரமணியம் தலைமை வகித்து, வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள், பழப் பயிர்களில் அடர்நடவு மற்றும் கிளைகள் பராமரிப்பின் முக்கியத்துவம், பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் அவசியம் குறித்து விளக்கினார்.
   தோட்டக் கலை உதவி இயக்குநர் சின்னதுரை, கொல்லிமலையில், பலா, அண்ணாசி, வாழை போன்ற பழ வகைகள் அதிக அளவில் பயிரிடப்படுவதால், பழ வகைகளின் உற்பத்தியைப் பெருக்க பழப் பயிர்களில் அடர்நடவு மற்றும் கிளைகள் பராமரிப்பு அவசியம் என்று தெரிவித்தார்.   முகாமில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, தோட்டக் கலை உதவி அலுவலர்கள் மாதேஸ்வரன், வெற்றிவேல், சுரேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் பிரபு ஆகியோர் செய்திருந்திருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai