சுடச்சுட

  

  மழை தொடர வாய்ப்புள்ளதால், கோழிகளில் தீவன எடுப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
   இதுகுறித்த செய்திக்குறிப்பு: அடுத்த 4 நாட்களுக்கு வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்படும்,  ஓரிரு இடங்களில் லேசான மழை இருக்கும்.  வட கிழக்கு பருவ மழையின் தாக்கம் மீண்டும் உயிர்பெற்றுள்ள நிலையில் மேக மூட்டமும், சாரல் மழையும் கொண்ட இந்த வானிலை கோழிகளுக்கான சாதகமான சூழ்நிலையாகக் காணப்பட்டாலும், ஈரத்தன்மை மிகுந்து காணப்பட்டு தீவனத்திலும், தீவன மூலப்பொருள்களிலும் பூஞ்சானத்தால் நச்சுக்கள் தோன்ற வாய்ப்புள்ளது.
    தீவனத்தையும், தீவன மூலப்பொருள்களையும் எச்சரிக்கையுடன் சேமித்தும்,  உடனுக்குடன் பயன்படுத்தியும் நச்சுகள் தோன்றுவதைத் தடுக்க வேண்டும். தீவன எடுப்பு அதிகமாக வாய்ப்புள்ளதால், உயர் மனைகளில் பக்கவாட்டில் படுதாவை கட்டியும், புருடர் மனைகளில் குஞ்சுகளுக்கு வெப்பத்தைச் சீராக கொடுத்தும் வர வேண்டும்.       
   கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் கடந்த வாரம் பரிசோதனை செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் மேல் மூச்சுக்குழாய் அயற்சி நோயின் தாக்கதால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனால் பண்ணையாளர்கள் சிறந்த உயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai