சுடச்சுட

  

  பரமத்தி வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை சுற்றுலா வாகனமும், மணல் லாரியும் மோதிய விபத்தில் சுற்றுலா வாகனத்தில் சென்ற 9 பேர் படுகாயமடைந்து, நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.
    திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் நாமக்கல் அருகே பெண் பார்ப்பதற்காக பரமத்தி வேலூர் வழியாக ஒரு சுற்றுலா வாகனத்தில் வந்துள்ளனர். பரமத்தி வேலூரில் இருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே வந்தபோது முன்னால் சென்ற மணல் லாரி மாற்றுச் சாலைக்கு திரும்பியுள்ளது. இதில் பின்னால் வந்த சுற்றுலா வாகனம் எதிர்பாராத விதமாக மணல் லாரி மீது மோதியுள்ளது.
    இதில் சுற்றுலா வாகனத்தில் பயணித்த காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையைச் சேர்ந்த சண்முகம் (40), காங்கேயத்தைச் சேர்ந்த சக்திவேல் (28), வெள்ளகோவிலைச் சேர்ந்த ரூபேஷ்ராஜன் (27), அவரது தந்தை தங்கவேல் (63), ஜெயலட்சுமி (40), வேலுசாமி (42), சிவன்மலையைச் சேர்ந்த சாந்தாமணி (48) உள்ளிட்ட 9 பேர் படுகாயமடைந்து, நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் சாலையைக் கடக்கும் வகையில் இடவசதி உள்ளது. ஆனால் முறையாக அவ் வழியாக சாலையை கடக்கும் வாகனங்கள் சமிக்ஞைகள் எழுப்பாமல் செல்வதால், அப் பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு வருவதாக அப் பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai