சுடச்சுட

  

  தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் பலரது நிலத்தை மோசடியாக கிரயம் செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
   நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே சானார்பாளையம் பகுதி மக்கள் 20-க்கும் மேற்பட்டோர் தமிழ் மாநில கூட்டுறவு பயனீட்டாளர் நலச் சங்க மாநில செயலர் பிரபாகரன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனிடம் அளித்த மனு விவரம்: நாமக்கல் மாவட்டம், சானார்பாளையம் பகுதியில் முத்துசாமி, பாலசுப்பிரமணியம், பழனிச்சாமி ஆகியோர் தங்களது நிலத்தை 45 மனை பிரிவுகளாக பிரித்து விற்றனர். இதனை 40-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாங்கி உள்ளனர்.
   சுமார் 2 ஏக்கர் 69 சென்ட் நிலத்தில், 1 ஏக்கர் 79 சென்ட் நிலத்தை குமாரபாளையத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகி மற்றும் அவரது மனைவி இருவரும் மோசடியாக கிரயம் செய்துள்ளனர். நிலம் அபகரிக்கப்பட்டதால் 40-க்கும் மேற்பட்ட மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
   எனவே, நிலத்துக்கான ஆவணங்களைச் சரிபார்த்து அபகரிக்கப்பட்ட நிலத்தை பொதுமக்களுக்கு கிடைக்கவும், நிலத்தை மோசடியாக கிரயம் செய்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai