சுடச்சுட

  

  ராசிபுரம் பகுதியில் தனி அறையில் தண்ணீர் ஆட்டோ ஓட்டுநர் உடல் தீயில் கருகிய நிலையில் வெள்ளிக்கிழமை சடலமாகக் கிடந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  ராசிபுரம் கோனேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு என்கிற பிரபு (32). இவருக்கு திருமணமாகி, குடும்பத் தகராறில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். ஆர்.புதுப்பாளையம் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் மாணவர் விடுதி நடத்திவரும் அருள் என்பவரிடம் தண்ணீர் எடுத்துவரும் ஆட்டோ ஒட்டிவந்தார்.
  இவர் ராசிபுரம் பகுதியில் எல்லைமாரியம்மன் கோயில் அருகே குடிநீர் விற்பனை செய்யும் ஈஸ்வரமூர்த்தி என்பவரது இடத்தில் நாள்தோறும் ஆட்டோவில் சென்று தண்ணீர் எடுத்துச் செல்வது வழக்கம்.
  இந்த நிலையில், சேட்டு என்கிற பிரபு இரண்டு நாள்களாக வேலைக்குச் செல்லவில்லையாம். இவருக்கு அதிக குடி பழக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வழக்கமாக தண்ணீர் எடுத்துவரும் பகுதியில் உள்ள ஈஸ்வரமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான அறையில் பிரபு தீயில் கருகி உயிரிழந்த நிலையில் பிணமாகக் கிடந்தார்.
   இதுகுறித்து அதிகாலை தண்ணீர் பிடிக்க வந்தவர்கள் கொடுத்த தகவலின்பேரில், போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
  இவர் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்தாரா, மின்சார விபத்தில் தீபிடித்து உயிரிழந்தாரா, அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai