சுடச்சுட

  

  நடா புயலைத் தொடர்ந்து  நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தமாக 84 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
   நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்தது. தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால், விவசாயிகள் கவலையடைந்தனர். போதிய மழையின்றி ஏரி, குளங்களில் தண்ணீரின்றி வறண்டு போனது. பகல் நேரங்களில் குறைந்தளவு வெயிலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அதிகளவு பனி மூட்டமும் காணப்பட்டது.
    வங்கக் கடலில் உருவான நடா புயல் காரணமாக நாமக்கல்லில் வியாழக்கிழமை காலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.
    வியாழக்கிழமை காலை 8 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மோகனூரில் அதிகபட்சமாக 15 மி.மீ மழை பதிவாகியது. மழையளவு விவரம் (மி.மீ.): நாமக்கல் 14, பரமத்தி 9, ராசிபுரம் 10, சேந்தமங்கலம் 10, திருச்செங்கோடு 8, எருமப்பட்டி 5, மங்களபுரம் 10, புதுச்சத்திரம் 3, மோகனூர்15  என மொத்தம் 84 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai