சுடச்சுட

  

  நாளை பெண் சிசுக் கருக்கலைப்பு தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி

  By DIN  |   Published on : 03rd December 2016 07:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெண் சிசுக் கருக்கலைப்பு தடுப்பு விழிப்புணர்வு பேரணி நாமக்கல்லில் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச.4) நடைபெறும் என அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாவட்டத் தலைவர் பி.ரங்கநாதன் தெரிவித்தார்.
   இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பெண் சிசு பிறப்பு விகிதம் மிக குறைவாக உள்ள மாவட்டமாக நாமக்கல் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பெண் சிசு  கருக் கலைப்பு தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்படவுள்ளது. காலை 8 மணிக்கு நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன் துவங்கும் பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் செல்கிறது. இந்த பேரணி மூலம், பெண் சிசு கருக்கலைப்பு தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
   அதில், பள்ளி மற்றும் செவிலியர் கல்லூரி மாணவியர், நாமக்கல் மாவட்ட டாக்டர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர்.
    பெண் இனத்தைக் காக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த பேரணியில், பொதுமக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்ளலாம். காலை 10 மணிக்கு இந்திய மருத்துவ சங்கக் கட்டடத்தில், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் பெண் சிசு கருக் கலைப்பு தடுப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai