சுடச்சுட

    

    எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு நிலவேம்பு கஷாயம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
     அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்க வேண்டும் என, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் உத்தரவிட்டுள்ளார்.
    அதன்படி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் செயல்படும் அரசு துவக்க, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
     நாமக்கல் அருகே எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், நாமக்கல் ஒன்றியத்துக்குள்பட்ட 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.
     அதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை, வள்ளிபுரம் ஆர்.சி. துவக்கப்பள்ளி, தொட்டிப்பட்டி, புலவர்பாளையம், சிவியாம்பாளையம், தாதம்பட்டி ஊராட்சி துவக்கப்பள்ளிகள், வேட்டாம்பாடி, தொட்டிப்பட்டி உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.
     சித்த மருத்துவ அலுவலர் பூபதிராஜா, சுகாதார மேற்பார்வையாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் முகமது ரபி, ராஜகணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai