சுடச்சுட

  

  நாமக்கல் மின் பகிர்மான வட்டம் சார்பில் டிசம்பர் மாதத்துக்கான மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
   இதுகுறித்து நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ்.சந்தானம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மின் பகிர்மான வட்டம் சார்பில் டிசம்பர் மாதத்துக்கான மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், அந்தந்த கோட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் புதன்கிழமைகளில் மாலை 3 மணிக்கு நடைபெறும்.
   7ஆம் தேதி நாமக்கல், 14ஆம் தேதி பரமத்திவேலூர், 21ஆம் தேதி திருச்செங்கோடு 28ஆம் தேதி ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதில் அந்தந்த கோட்ட அலுவலகத்துக்கு உள்பட்ட மக்கள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம். இதன்பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai