சுடச்சுட

    

    ராசிபுரம் அருகே பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராசிபுரம் அருகேயுள்ள அத்தனூர் ஆலாம்பட்டி மதுரைவீரன் தெருவைச் சேர்ந்தவர் சின்னமணி. கட்டட மேஸ்திரி. இவரது மனைவி பூங்கொடி (27). இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்த நிலையில், பூங்கொடி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை கொண்டதாகக் கூறப்படுகிறது. இவரது சாவில் சந்தேகம் இருப்பதாக பூங்கொடியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், வெண்ணந்தூர் போலீஸார் பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai