சுடச்சுட

  

  10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் பேருந்து நடத்துநர்கள்

  By DIN  |   Published on : 03rd December 2016 07:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அனைத்து 10 ரூபாய் நாணயமும் செல்லும் என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்த பின்னரும் வணிக வட்டாரங்களிலும், பேருந்துகளிலும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் பிரச்னை அதிகரித்து வருகிறது.
    10 ரூபாய் நாணயம் வணிக வட்டாரங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிக புழக்கத்தில் இருந்து வருகிறது. வங்கிகளில் இருந்துகூட சில்லறை கேட்பவர்களுக்கு 10 ரூபாய் நாணயம் மொத்தமாக வழங்கப்படுகிறது.
   இந்த நிலையில், கடந்த மாதம் 10 ரூபாய் நாணயம் செல்லாது என தகவல் வெளியானது.  இதனையடுத்து, 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற தகவல் தவறானது, வெறும் புரளி தான் என்றும் புழக்கத்தில் உள்ள அனைத்து 10 ரூபாய் நாணயங்களும் செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் விளக்கம் அளித்தது.  
   எனினும், இதுவரை இல்லாத அளவில் பொதுமக்களிடம் இருந்து 10 ரூபாய் நாணயங்கள் சிறு வணிக மையங்களிலும், பேருந்துகளிலும் கொடுக்கப்பட்டது. பேருந்துகளில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதும், நடத்துநர்கள் மீதி சில்லரை கொடுக்கும்போது 10 ரூபாய் நாணயத்தைக் கொடுத்தால் அதை பயணிகள் வாங்க மறுப்பதுமாக பிரச்னை ஏற்பட்டு வருகிறது.
   மேலும், சிறிய கடைகளிலும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் நிலை ஏற்பட்டது. திரும்பக் கொடுக்கும்போது யாரும் வாங்க மறுப்பதால், 10 ரூபாய் நாணயத்தை வாங்க முடியவில்லை என கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
    தவறான தகவலால் 10 ரூபாய் நாணயப் புழக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி புழக்கத்தில் உள்ள அனைத்து 10 ரூபாய் நாணயங்களும் செல்லும் என்று அறிவித்துள்ளதால், பொதுமக்களும், சிறு வணிகர்களும், பேருந்து ஊழியர்களும் வழக்கம்போல் 10 ரூபாய் நாணயங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai