சுடச்சுட

    

    மணல் குவாரிகள் நிறுத்தத்தால் மணல் தட்டுப்பாடு: செல்ல.ராசாமணி

    By நாமக்கல்,  |   Published on : 10th December 2016 09:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வருமான வரித் துறை சோதனையால் தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
     அதனால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு கட்டுமானப் பணிகள் பாதிக்கும் நிலை உள்ளதால், பொதுப் பணித் துறை நேரடியாக மணல் குவாரிகளை நடத்த வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்தார்.
     இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: வேலுôர் மாவட்டத்தில் மணல் குவாரிகளில் முறைகேடு நடப்பதாக வந்த தகவலை அடுத்து வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
     இதனால் தமிழகம் முழுவதும் 70,000 மணல் லாரிகள் லோடு ஏற்ற முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர் மற்றும் தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமானப் பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
     இதைக் கருத்தில் கொண்டு பொதுப் பணித் துறை நேரடியாக, வங்கி வரைவோலை பெற்றுக்கொண்டு மணல் வழங்கவும், மணல் குவாரிகளை தொடர்ந்து இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai