சுடச்சுட

  

  யுவராஜ் நீதிமன்றக் காவல்: ஜனவரி 2 வரை நீட்டிப்பு

  By நாமக்கல்,  |   Published on : 10th December 2016 09:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜுக்கு ஜனவரி 2ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
   சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
   இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் பிணை பெற்று யுவராஜ் வெளியே வந்தார். ஆனால், உச்சநீதிமன்றம் அவருக்கான பிணை சலுகையை ரத்து செய்ததால் மீண்டும் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
   அவரின் நீதிமன்றக் காவல் வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, அவரிடம் நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி இளவழகன் காணொலிக் காட்சி மூலம் யுவராஜிடம் விசாரணை நடத்தினார். பின்னர், ஜனவரி 2ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதேபோல, சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜின் கார் ஓட்டுநர் அருண் நீதிமன்றக் காவலும் ஜனவரி 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai