சுடச்சுட

    

    உலக மனித உரிமைகள் தினத்தையொட்டி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் மனித உரிமைகள் தின உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை அலுவலர்கள், பணியாளர்கள் பின்தொடர்ந்து உறுதிமொழியை ஏற்றனர்.
    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் நா.பாலச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கே.எஸ்.முரளிகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ச.ராமகிருஷ்ணன், கலால் உதவி ஆணையர் புகழேந்தி உள்பட அரசுத் துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai