சுடச்சுட

  

  கல்லூரி பேருந்து மீது தனியார் பேருந்து மோதல்; 10 பேர் காயம்

  By DIN  |   Published on : 11th December 2016 03:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராசிபுரம் அருகே கல்லூரி பேருந்தின் பின்புறம் தனியார் பேருந்து மோதியதில் பயணிகள் 10 பேர் காயமடைந்தனர். அனைவரும் ராசிபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  ஈரோடு மாவட்டம், பவானியிலிருந்து ராசிபுரம் நோக்கி ஒரு தனியார் பேருந்தும் அதுபோல திருச்செங்கோட்டிலிருந்து ராசிபுரம் நோக்கி தனியார் கல்லூரிப் பேருந்தும் சனிக்கிழமை சென்றுக் கொண்டிருந்தன.
  இரு பேருந்துகளும் வையப்பமலை நல்லம்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது கல்லூரி பேருந்தின் பின்புறம் தனியார் பேருந்து மோதியது.
  இதில், தனியார் பேருந்தில் பயணம் செய்த பாவனியைச் சேர்ந்த பொன்னுமணி (75) காமாட்சி (60) தேவி (40) சின்னமுத்து (70) கஸ்தூரி (39) ராமாயி (40) மலர்விழி (47) பழனியம்மாள் (65) தேவி (27) உள்ளிட்ட 10-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
  அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து எலச்சிபாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai