சுடச்சுட

  

  நாமக்கல் மாவட்டம், குமரமங்கலத்தில் வரும் 14-ஆம் தேதியும், கொல்லிமலை வாழவந்தியில் வரும் 16-ஆம் தேதியும் கிராம அடிப்படை பயிற்சி தொடங்க உள்ளதாக வேளாண்மை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து நாமக்கல் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் சுப்பையா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் வட்டாரம், குமரமங்கலத்தில் வரும் 14, 15-ஆம் தேதிகளில் காலை 10 மணிக்கு கிராம அடிப்படை பயிற்சி நடைபெறவுள்ளது. அதேபோல் வரும் 16, 17-ஆம் தேதிகளில் காலை 10 மணிக்கு கொல்லிமலை வாழவந்தி நாட்டில் கிராம அடிப்படை பயிற்சி நடைபெற உள்ளது.
  இப்பயிற்சியின்போது வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, வேளாண் வணிகம், விதைச்சான்றிதழ், மண் ஆய்வுக்கூடம், பட்டு வளர்ச்சி, வனம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த வேளாண்மை அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
  பயிற்சியில் உழவர் மன்ற அமைப்பாளர்கள், உறுப்பினர்கள், முன்னோடி விவசாயிகள் பங்கேற்றுப் பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு எலச்சிபாளையம், கொல்லிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகலாம்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai