சுடச்சுட

  

  டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: திருச்செங்கோட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

  By DIN  |   Published on : 11th December 2016 02:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்குத் தொடர்பாக திருச்செங்கோட்டில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினர்.
  திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாகப் பணியாற்றிய விஷ்ணுபிரியா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி டி.எஸ்.பி. முகாம் அலுவலகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
  தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த அவர், உயரதிகாரிகள் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. முதலில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்திய நிலையில், பின்பு உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐக்கு மாற்றப்பட்டது.
  இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போதிலும், சிபிஐ விசாரணைக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
  இதனையடுத்து சிபிஐ அதிகாரிகள், அண்மையில் கடலூரில் உள்ள விஷ்ணுபிரியாவின் பெற்றோரிடம் விசாரணை
  நடத்தினர்.
  அதன்பின், வெள்ளிக்கிழமை காலை நாமக்கல் வந்த சிபிஐ எஸ்.பி. ராஜபாலாஜி, டி.எஸ்.பி. ரவி ஆகியோர் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனிடம் ஆலோசனை நடத்தினர்.
  வரும் 16-ஆம் தேதி வரை நாமக்கல் மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள், இரண்டாவது நாளாக சனிக்கிழமை திருச்செங்கோடு டி.எஸ்.பி. முகாம் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு டி.எஸ்.பி. சுரேஷ்குமார், விஷ்ணுபிரியாவுக்கு சமையல் செய்துவந்த பார்வதி, அங்கு பணியாற்றிய ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
  பின்னர், விஷ்ணுபிரியா தற்கொலை செய்த அறையைப் பார்வையிட்டனர். அறையின் மொத்த நீளம், அகலம், அறை ஜன்னல்கள் மற்றும் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட மின்விசிறி ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இவர்களுடன் ஹைதராபாத்தைச் சேர்ந்த தடய அறிவியல் நிபுணர்களும் சோதனை நடத்தினர்.
  இந்த ஆய்வின்போது விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, உறவினர்கள் உடன் இருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai