சுடச்சுட

  

  பரமத்தி வேலூர் ஏலச் சந்தையில் வெள்ளைக்கொடி வெற்றிலை விலை சரிவு

  By DIN  |   Published on : 11th December 2016 03:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமத்திவேலூர் வெற்றிலை ஏலச் சந்தையில் கடந்த வாரம் ரூ. 5,000-க்கு ஏலம் போன வெள்ளைக்கொடி வெற்றிலை நிகழ்வாரம் ரூ. 4,000-க்கு ஏலம் போனது.
  பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் வெற்றிலை பயிரிடப்பட்டுள்ளது.
  இங்கு விளையும் வெற்றிலைகள் கர்நாடகம், கேரளம், குஜராத், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழகத்தில் சேலம், கோவை, மதுரை என பிற மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
  கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை (இளம்பயிர் மார்) 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ. 5,000-க்கும், கற்பூரி வெற்றிலை (இளம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ. 3,000-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை (முதியம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ. 2,500-க்கும், கற்பூரி வெற்றிலை (முதியம் மார்) 1,500-க்கும் ஏலம் போனது.
  இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை (இளம்பயிர் மார்) 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ. 4,000-க்கும், கற்பூரி வெற்றிலை (இளம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ. 4,500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை (முதியம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ.2,000-க்கும், கற்பூரி வெற்றிலை (முதியம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ.2,300-க்கும் ஏலம் போனது. வெள்ளைக்கொடி வெற்றிலை வரத்து அதிகரித்ததால் நிகழ்வாரம் ரூ.1000 வரை விலை சரிந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai