சுடச்சுட

  

  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் சார்பில், வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
  கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கு.பாலகிருஷ்ணன் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து கல்லூரி மாணவ மாணவியர்கள், பேராசிரியர்கள் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். இதேபோல் ராசிபுரம் முத்தாயம்மாள் நினைவு கலை அறிவியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர் மௌன அஞ்சலி செலுத்தினர்.
  கல்லூரி அறக்கட்டளை நிர்வாகிகள் ஆர்.ராமசாமி, ஆர்.பிரேம்குமார், கல்லூரி முதல்வர் எம்.ஆர்.லட்சுமிநாராயணன், பாலிடெக்னிக் முதல்வர் ஜி.விஜயக்குமார், கல்லூரிப் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai