Enable Javscript for better performance
ராசிபுரம் ஸ்கேன் மையங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் ஸ்கேன் மையங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

    By DIN  |   Published on : 11th December 2016 03:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என பாலினத்தைக் கண்டறிந்து தெரிவிப்பதாக வந்த புகாரை அடுத்து ராசிபுரம் தனியார் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையங்களில் சுகாதாரத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
    நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தை பிறப்பு, குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இதனையடுத்து ஸ்கேன் சென்டர்களை ரகசியமாக அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் 99 தனியார் ஸ்கேன் சென்டர்கள் உள்ளன.
    இதில், சில ஸ்கேன் சென்டர்களில் பெண்ணின் கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? எனக் கண்டறிந்து கூறுவது தெரியவந்தது. இதைத் தடுக்க சுகாதாரத் துறை சிறப்பு அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில் மருத்துவக் குழுவினர், சிசுவதைத் தடுப்பு டி.எஸ்.பி., நரசிம்மவர்மன் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாமக்கல்லில் பல்வேறு ஸ்கேன் சென்டர்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
    அப்போது 5 முக்கிய ஸ்கேன் சென்டர்களில் கருவில் உள்ள சிசுவின் பாலினம் குறித்த தகவல்களைச் சட்ட விதிமுறைகளை மீறி கூறி வந்தது ஆதாரத்துடன் தெரியவந்தது. இதையடுத்து அந்த 5 ஸ்கேன் சென்டர்களுக்கும் அதிகாரிகள் "சீல்' வைத்தனர். அதைத் தொடர்ந்து தற்போது ராசிபுரம் நகரில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஸ்கேன் மையங்களிலிருந்து பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai